February 13, 2021
பெண்கள் வளையல் அணிவதால் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கும்.
ஆன்மீக ரீதியாக பார்த்தால் வளையல் ஒரு சுபமங்கள ஆபரணம். வளையலில் ஸ்ரீலஷ்மி வாசம் செய்வதால் அதை அணிபவர்களுக்கு லஷ்மிகடாக்ஷம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வைத்துள்ளனர்.. அத்துடன் வளையலின் இனிமையான ஒலி தீய சக்திகளை அதாவது எண்ணங்களை அகற்றும்.
அறிவியல் ரீதியாக பார்த்தால் வளையல் உடல் நலத்தையும் மனநலத்தையும் சீர்படுத்துகிறது. மணிக்கட்டு பகுதியில் உராய்ந்து கொண்டு மென்மையான ஒலியையும் தருவதால் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராகி, மனஅழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கிறது. தீய எண்ண அலைகள் பிறரிடமிருந்து நம்மை தாக்காதவாறு வளையலின் ஒலி காக்கிறது.
திருமணமாகத பெண்கள் அவரவர் விருப்பப்படி வளையல் அணிவர். ஆனால் திருமணத்தில் விருப்பப்படி வளையல் அணிந்தாலும் அதனுடன் பரம்பரை வளையல் என்ற ஒன்றையும் அணிவிப்பர். பரம்பரை வளையல் என்பது பொன்னால் செய்யப்பட்டு வழிவழியாக திருமணமாகி வரும் மணமகளுக்கு மாமியார், பாட்டி அல்லது தாய் இவர்கள் மூலமாக கிடைப்பது. அத்துடன் கர்பிணி பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்களின் ஒலி கருவிலிருக்கும் குழந்தைக்கு மகிழ்ச்சியை தருவதோடு, தீய எண்ண அலைகள் குழந்தையை அடையாமல் தடுக்கும் என்றும் எண்ணுகிறார்கள்.
தங்க வளையல், வெள்ளி வளையல், சங்கு வளையல், தந்தத்தால் செய்யப்பட்ட வளையல், கண்ணாடி வளையல் என்று பலவகை இருந்தாலும் நவீன யுகத்தில் உடையாத, வண்ணமயமான பிளாஸ்டிக் வளையல்கள் மலிவாக கிடைக்கின்றன. ஆனால் பிளாஸ்ட்டிக் வளையல் அணிவதால் மேற்கண்ட எந்த பலனும் கிடைப்பதில்லை... அவை அழகுக்காக மட்டுமே பயன்படும்.