September 8, 2020
தியானத்தின் மூலம் மெய்ஞானத்தை அடைய முயற்ச்சிப்பவர்களே சித்தர்கள் என்ப்படுவர். இவர்கள் சராசரி மனிதனுக்கு உண்டாகும் உடல் இச்சையை துறந்தும், மனக்கட்டுப்பாட்டையும், உணர்வு கட்டுப்பாட்டையும் கொண்டும் வாழ்பவர்கள். வானசாஸ்திரம், ரசவாசம், மூலிகை வைத்தியம், மாந்த்ரீக சூத்திரம், யோகம் போன்ற கலைகளை இயற்றிவர்ளாகவும் பல சித்தர்கள் உள்ளனர்.
சித்தத்தில் சிவனை காணும்வரை தவம் செய்யும்போது, உடல் ஆரோக்யம் பாதிக்கப்படாமல் இருக்க காயகல்பம் என்னும் ஒருவகை மருந்தை உண்டு தவத்தை தொடங்குவர். இதன்மூலம் உணவு, நீர் இல்லாமல் நெடுங்காலம் தவமியற்றினாலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்கும். சித்தர்கள் சராசரி மக்களோடு கலந்து வாழ்ந்தாலும் தாமரைஇலை தண்ணீர் போல பற்றற்று வாழ்வர். குகை அல்லது கோயில்களில் வசிப்பர். நாளுக்கு ஒருமுறையோ சில நாட்களுக்கு ஒருமுறையோ கோயில்களில் கிடைக்கும் உணவையோ, காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் பழங்களையோ உணவாக எடுத்துக்கொள்வர். அதே நேரம் மக்களின் நோய்நொடிகளைத் தீர்க்க வைத்திய முறைகளை கையாண்டு உதவுவர்