September 8, 2020
கிராமங்களில் குலதெய்வமாக வணங்கப்படும் சிறு தெய்வங்களாகிய கருப்பண்ணசாமி, முனி, வீரபத்ரன், பட்டத்தரிசியம்மன், பிடாரியம்மன், காளி போன்ற தெய்வங்களுக்கு எழுப்பப்பட்ட கோவில்களில், குறிப்பிட்ட வகுப்பினரால் தேர்வு செய்யப்பட்டு பூஜை செய்பவர்கள் பூசாரிகள் என்று அழைக்கப்படுவர்.
பூசாரிகள் முறையாக வேதம் படிக்காதவர்கள். மந்திரம் கற்காதவர்கள். ஆனால் பக்தி சிரத்தையுடனும் மனத்தூய்மையுடனும் பூஜை செய்பவர்கள். இவர்கள் வழிவழியாக முன்னோர் காலம்தொட்டு பூஜை செய்துவருவதால் பூசாரிக்குடும்பம் என்றும் ஊர் பூசாரி என்றும் தகுந்த மரியாதை கொடுப்பர் மக்கள்.
குறிப்பாக வேண்டுதல் என்ற பெயரில் கிடாவெட்டு, சேவல் பலி போன்ற வழிபாடுகளைச் செய்யும் கோயில்களில், அதாவது அசைவ பூஜை செய்யப்படும் கோயில்களில் பூஜை செய்பவர்களே பூசாரி என்று அழைக்கப்படுவர்.