மருத்துவம் ஆன்மிகம் அறிவியல் தொடர்புகொள்

குலதெய்வம் என்றால் என்ன?

 

  September 9, 2020

முன்னுரை

நம் குலத்தை பிரச்சனைகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் காக்கும் ஆத்மாவையே குலதெய்வம் என்கிறோம். நம் வம்சாவளியில் குடும்ப நலனுக்காக உயிர் தியாகம் செய்தும், அல்லது குடும்பத்தாரால் கொடுமைக்கு ஆளாகியும் மடிந்த புனித ஆத்மாவையே போற்றுவதற்கும், பிராயச்சித்தம் செய்வதற்கும், எல்லைக்காக்கும் தெய்வங்களுக்கும் குலதெய்வம் ஆக்கப்பட்டு வழிபடப்படுகிறது. பெரும்பாலும் கன்னிப்பெண்களாக இறந்த ஆத்மாக்களே குலதெய்வம் ஆகின்றனர்.

ஆண் குலதெய்வங்களும் உண்டு. குல தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். சிறிய மரப்பெட்டி, மஞ்சள் துணியால் கட்டப்பட்ட மண்பானை, சுவரில் மஞ்சள் பூசி குங்குமம் வைக்கப்பட்ட வட்டமாக என்று பலவிதத்தில் இருக்கும்.

Famil God
விளக்கங்கள்

குலதெய்வ கோயில் மரத்தடி, வரப்பு, கிணற்றுமேடு, களத்துமேடு போன்ற இடங்களில் இருக்கும். கோயில் கோபுரம் என்று எதுவும் இருக்காது. குலத்தவரின் வசதியை பொறுத்து குலதெய்வத்தின் அனுமதியுடன் பெரிய அளவிலான சிலைகள் மற்றும் மதில் சுவர்கள் கட்டப்பட்டாலும் கருவறை, கோபுரம், கலசம் என்று எதுவும் வைக்க அனுமதிக்காது.

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

ஆண்டுக்கொரு முறை ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு நாளை குலதெய்வ வழிபாட்டுக்கென வைத்திருப்பர். சிலர் ஆடிமாதம் 28ம் நாள். சிலர் பங்குனி, சித்திரை மாதங்களில் குறிப்பிட்ட ஒருநாள் என்று வழிவழியா கடைபிடித்து வருவர். பெண் தெய்வம் என்றால் புதுசேலை, வளையல், மஞ்சள், குங்குமம், பூ போன்றவை வைத்தும், ஆண் தெய்வம் என்றால் வேட்டி, துண்டு, மாலை, தலைப்பாகை போன்றவை வைத்தும் தூய்மையாக சமைத்த உணவுகளை படைத்து வழிபடுவர். சிலர் அசைவம் வைத்தும் புகையிலை, மது போன்றவை வைத்தும் வழிபடுவர். மொட்டை அடித்தல் காத்து குத்துதல்கள் கூட இருக்கும்

ஆம்...

குலதெய்வம் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும். சில வகை சைவ வழிபாடும் உதாரணமாக மாரியம்மன், மாதேஸ்வரன், முருகன், சீலைக்காளி, பெட்டிக்காளி, பேச்சியம்மாள் போன்றவையும், சில வகை அசைவ வழிபாடும் உதாரணமாக கருப்பசாமி, முனி, பிடாரியம்மன், காளி, பெரியாண்டிச்சி... போன்றவையும் கொண்டிருக்கும்.

தெவம் என்றால் என்ன?

தெவம் என்று அழைக்கப்படும் இறைவழிபாடு சிலர் ஐந்து வருடத்திற்க்கு ஒருமுறை அல்லது பத்து வருடத்திற்கு ஒருமுறை கிடா அல்லது கோழி பலியிட்டு சொந்தங்கள் அனைவரையும் அழைத்து பூஜை செய்து விருந்து கொடுப்பர். இந்த பூஜைக்கு 'தெவம்' என்றழைப்பார்கள்

குலதெய்வத்தை ஏன் எப்பொழுது எப்படி எங்கு எதனால் வணங்க வேண்டும்?

நாம் எந்த ஒரு செயலை செய்ய போகும் போதும் வீட்டிலோ கோயிலிலோ இருக்கும் குலதெய்வத்தை போய் வணங்க வேண்டும். அப்படி செய்ய முடியாத சூழலில்... இருக்கும் இடத்தில் இருந்தபடியே மனமுருக வேண்டிக் கொண்டு எந்த காரியத்தையும் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது மூதாதையர் நம்பிக்கை.

தன் குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் நெருங்கிய உறவினர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியும் தெரியவில்லை என்றால் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி அன்று சிவபூஜை செய்தால் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும்.

Nammunnorgal : TAGs
god
family
temple

கருத்துகள்

CAPTCHA code

SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'cmt_id' in 'order clause'